வலுவான எதிர்க்கட்சி! மோடியின் சாதனை! நடிகர் ரஜனிகாந்த் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளார்கள். மேலும் இந்த பதவியேற்பு விழாவிற்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்திற்க்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்கையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். 

இது மிகப்பெரிய சாதனை. நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். மேலும் இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Say About PM Modi And Rahul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->