மக்களவை தேர்தல் வெற்றி! சீமானை பாராட்டி தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகளுக்கு மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த மக்களவை தேர்தலில் தமிழ்கத்தில் எட்டு சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தை கட்சிக்கும் மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் நடிகர் விஜய், திமுக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்திகளை சந்தித்து தெரிவிக்கையில், "மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் கிடைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டுக்கள்.

பிரதமரின் பதவி ஏற்பு விழாவுக்கு தற்போது நான் டெல்லி செல்கிறேன். நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது மிகப்பெரிய சாதனை. மேலும் இந்த முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது"  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth wish seeman Thiruma


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->