ராமஜெயம் கொலை வழக்கு பிரபல ரவுடிகளிடையே உண்மை அறியும் சோதனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை திருச்சி மாவட்டம் தில்லைநகரில் நடந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் பல ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு புலன் விசாரணை குழுவினர். இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், உள்ளிட்ட பலருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெறவுள்ளது .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramajeyam murdar case twelve rowdies test


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->