திமுக நிர்வாகிகள் கடத்தியது போதைப்பொருள் அல்ல, அது விவசாய உரம் - போலீசார் தரப்பில் தகவல்! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜீரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிகஅதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது.

இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தின் பிரபல நாளேடு ஒன்றில் வெளியான செய்தியில், கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயற்சி செய்தபோது, திமுக நிர்வாகிகள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramanadhapuram smuggling case dmk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->