#சற்றுமுன் || போராட்டத்தை அறிவித்த இரு மாவட்ட மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.

சிங்களக் கடற்படை செய்துள்ள இந்த அராஜக செயலுக்கு பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

மேலும், மீண்டும் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை, அவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இதற்கிடையே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாளை மறுநாள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 55 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நாளை மறுநாள் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எல்லை தாண்டி பிடித்ததாக நேற்று கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதி 12 மீனவர்களை ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை மன்னார் மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramanathapuram fiserman announce protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->