திடீரென உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல் - சுனாமி வருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள்.!
rameshwaram sea absorbed causing
திடீரென உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல் - சுனாமி வருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள்.!
சுற்றுலா தளங்களில் ஒன்றாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் உள்ளது. இந்துக்களின் புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமியை தரிசனம் செய்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இங்கு வந்து ராமநாதசுவாமியை வணங்கிவிட்டு செல்வார்கள். பொதுவாகவே இங்கு பக்தர்களின் வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதன் படி பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் நீராடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கடல் உள்வாங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைவரும் பயத்தில் கரைக்குத் திரும்பினர்.
திடீரென கடல் உள்வாங்கிக் கொண்டதனால் பவளப் பாறைகள் அனைத்தும் வெளியில் தெரிந்தது. பக்தர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது கடல் எதிர்பாராதவிதமாக உள்வாங்கியது சுனாமி வருவதற்கான அறிகுறியாக இருக்குமோ? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடல் அடுத்த ஒருமணி நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
English Summary
rameshwaram sea absorbed causing