ராமேசுவரம் | தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு! என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை!  - Seithipunal
Seithipunal


தேசிய புலனாய்வு அமைப்பு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அதில் தொடர்பு கொண்டுள்ளவர்கள், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

அந்த வகையில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சையது யூசுப் (வயது 30) 

அதே பகுதியில் இவரது தந்தை மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சையது துபாய் நாட்டிற்கு சென்று ஆறு மாதங்கள் வரை தங்கி மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். 

துபாயில் சையது தங்கியிருந்த நாட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பெயரில் அதிகாரிகள், சொந்த ஊர் திரும்பிய சையதுவை ரகசியமாக கண்காணித்து அவர் யாருடன் பேசி வருகிறார் என பல தகவல்களை சேகரித்தனர். 

தங்கச்சிமடம் கிராமத்துக்கு காலை 5.40 மணிக்கு 7 என்.ஐ.ஏ அதிகாரிகள் சையது வீட்டிற்குள் அதிரடியாக சோதனை நடத்தினர். 

அவரது வீட்டில் இருந்தவர்களை யாரும் வெளியில் அனுப்பாமல் அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன், கணினி போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். 

ஆனால் இந்த சோதனையில் அதிகாரிகள் எந்தவித ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை. இருப்பினும் சையது மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல கூடாது. 

அப்படிச் சென்றால் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு அழைக்கும் போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். 

என்.ஐ.ஏ அதிகாரிகள் மீனவ கிராமத்தில் திடீரென சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram youth house NIA raid


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->