கனத்த இதயத்துடன் வெளியேறுகின்றேன்! கமலுக்கு ஷாக் கொடுத்த ரம்யா வேணுகோபால்! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சினிமா, சின்னத்திரை ரியாலிட்டி ஷோ, அரசியல் மூன்று பணிகளையும் செய்துவரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாளுக்குநாள் தேய்ந்து கொண்டே வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆளும் திமுகவில் இணைந்து விட்டனர். 

தேர்தல் களத்தில் இதுவரை வெற்றி கணக்கை தொடங்காத கமல்ஹாசன், தற்போது சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சம்பளம் வாங்கும் மேலாளர்களால் மக்கள் நீதி மய்யம் பாதிக்கப்படுவதாகவும், கமல்ஹாசனுக்கு முன்பை விட தற்போது உண்மையான ஆதரவாளர்கள் தேவை என கூறி, அக்கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசனை தவிர, மற்றவர்கள் யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை என்றும் ரம்யா வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல் நபர்களால் மக்கள் நீதி மய்யம் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது. கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுகின்றேன் என்றும் ரம்யா வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramya Venugobal left MNM party


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->