ரம்ஜான் பண்டிகை : தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆடுகள் விற்பனை.! - Seithipunal
Seithipunal


ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும்.

ஆனால், பிறை எந்த நாளில் தெரியும், எந்த நாட்டில் எந்த நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்ற குழப்பம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்தததால் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர். மேலும், நாளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக விற்பனையாகியுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் வார சந்தையில் சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramzan festival goats sales


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->