அம்மன் சேலைகளை தீயிட்டு கொளுத்திய சமூக விரோதிகள்.. காவேரிப்பாக்கம் காமாட்சி அம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காவேரிப்பாக்கம் அருகே அம்மன் சேலையை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பக்கத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன் பஞ்ச லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் காமாட்சி அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த சேலைகள் கருகிய நிலையில் இருந்துள்ளது. 

சுமார் 100 வருடங்கள் பழமையான கோவிலில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த சேலைகள் சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அம்மனின் சிலை முன்பு கருகிய நிலையில் சேலைகள் இருந்ததை கண்டு கோவில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட கயவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Kaveripakkam Sri Kamatchi Amman Temple Amman Saree Burned by Anti Socialist


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->