வழக்கறிஞரை நம்பிய பட்டதாரி பெண்ணுக்கு பலத்காரம், கருக்கலைப்பு, கொலை மிரட்டல்!...நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை? - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,  எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், இவரின் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இவரது தாயாரின் ஓய்வூதியம் பணம் கிடைப்பதற்காக இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட வக்கீல் வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக்கூறி அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த வக்கீல், இந்த பெண் கார்ப்பமானதை அடுத்து,  கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து கருவை கலைத்துள்ள சம்பவம் திடுக்கிடும் வகையில் அமைந்துள்ளது.

வக்கீலிடம் இதுதொடர்பாக  அந்த பெண் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததுடன், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rape abortion death threats to a graduate woman who trusted a lawyer will the justice department take action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->