விரைவில் ரேஷன் பொருட்களை டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வருங்காலத்தில் வாய்ப்பு உள்ளது.

25 கிலோ பாக்கெட் செய்யும் பொருளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது. எனவே வீடுகளுக்கு சென்று நேரடியாக டெலிவரி செய்ய வேண்டும் என்றால், பாக்கெட்டுகளில் கொடுத்தால் தான் முடியும். 

தற்போது தமிழகத்தில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூர் பகுதியில் இரண்டு மில்கள், திருவாரூரில் இரண்டு மில்கள், கடலூரில் ஒன்று என ஆறு மில்களில் ஒரு நாளைக்கு 500 மெட்ரிக் டன் அரிசிகளை பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க முடிவு செய்தோம். 

ஆனால் மத்திய அரசு 25 கிலோ அரிசி பேக்கிங் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி போட்டு விட்டனர். இதனால் இந்த திட்டம் முடங்கி போய் உள்ளது.

வருங்காலத்தில் மத்திய அரசு பொது மக்களுக்கு இதுபோன்று விநியோகம் செய்ய அனுமதி வழங்கினால், இந்த திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பரிசினை செய்து, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பார். 

அப்படி கொடுக்கும் பட்சத்தில் ரேஷன் பொருட்களின் அளவு மற்றும் தரம் சரியாக இருக்கும்" என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration Shop Ration Home Delivery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->