பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை வழக்கம்போல் ரேஷன் கடை செயல்படும்!
Ration shops Tamil Nadu Government Pongal
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை சேர்ந்து 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.
மொத்தம் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட இருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கும் டோக்கனில் பொருட்கள் வாங்க வர வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பணியை 4 நாட்களில் முடிக்க அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக, அனைத்து ரேஷன் கடைகளும் நாளையும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக ரேஷன் கடைகள் மாதத்திற்கு இரண்டு வாரங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ration shops Tamil Nadu Government Pongal