நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய பா.ஜ.க பிரமுகர்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, குண்டூரை சேர்ந்த ராமாராவ் (வயது 60) இவர் கடந்த 37 ஆண்டுகளாக கொடைக்கானலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

இவருக்கு சொந்தமாக கிளாவரை பகுதியில் 120 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ராமராவ் சொந்த பிரச்சனை காரணமாக குடும்பத்துடன் ஆந்திரா சென்று விட்டதால் அவரது 120 ஏக்க நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்குமாறு நாயுடுபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை சாதகமாக பயன்படுத்திய விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் ரகு இருவரும் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். 

தற்போது கொடைக்கானலில் இருந்து வந்த ராமாராவ் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார். 

ஆனால் விஜயகுமார் அவரது நண்பர் மற்றும் பா.ஜ.க பிரமுகர் பிரபுதேவா மூவரும் சேர்ந்து ராமாராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனால் ராமாராவ் இது குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமார், ரகு, பிரபுதேவா மூவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

real estate owner attempt grab land 3 arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->