அடி மட்ட தொண்டனின் மனக்குமுரல் பதிவு..அரசியல்வாதிகளின் காதுகளில் கேட்க்குமா?
Record of the grassroots Will it be heard in the ears of politicians
அரசியல் வாதிகளுக்கு கொடி பிடித்து,இரவு பகல் பாராமல் போஸ்டர், பேனர் ஒட்டி, பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் சேர்த்து,விசுவாசம் என்ற நம்பிக்கையில் பல லட்ச ரூபாய் இழந்து நாசமாய் போன அடி மாட்டு தொண்டனின் மன குமுறல் சத்தம் ஓன்று வெளிவந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதி, மேரி உழவர்கரையை சேர்ந்த G.P. தெய்வீகன் என்ற அடி மாட்ட தொண்டனின் மன குமுறல் சத்தம் தான் இது.இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள செய்தியில்: ஒரு வேளை சோத்துக்கு நடுத்தெருவில் நிறுத்தி பிச்சை எடுக்க வைக்கும் புதுச்சேரி அரசு, ஆதரவு கொடுக்க ,உதவி செய்ய நாதியற்ற கூட்டம் நாசமாகிப்போன இளைஞர்கள் வாழ்க்கை கடந்த 10 ஆண்டுகளாக ரூ 50, ரூ100 பிச்சை எடுத்து போராட்டம் செய்யும் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், வாழ்கையின் விளிம்பு நிலையில் நொந்து மனசுக்குள்ள வெந்து குடும்பத்தில் கூனி குறுகி கேவலப்பட்டும் வட்டி கட்டியும் வறுமையில் வாழும் ஊழியர்களுக்கு எப்போது தான் விடிவு காலம் என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் ,தொடர்ந்து போராட உடம்பில் தெம்பும் இல்லை மனசுல தெய்ரியமும் இனிமேல் இல்லை .
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளும் நல்லா இருங்க , கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் எல்லாத்தையும் பர்த்துக்கட்டும் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் 2600 ஊழியர்களின் குடும்பங்களின் கண்ணீர் மட்டும் உங்களை சும்மாவே விடாது .
அரசியல் வாதிகளுக்கு கொடி பிடித்து,இரவு பகல் பாராமல் போஸ்டர், பேனர் ஒட்டி, பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் சேர்த்து,விசுவாசம் என்ற நம்பிக்கையில் பல லட்ச ரூபாய் இழந்து நாசமாய் போன அடி நாடு தொண்டன் என அந்த பதிவில் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதி, மேரி உழவர்கரையை சேர்ந்த G.P. தெய்வீகன் மனக்குமுறலை பதிவிட்டுள்ளார்.இந்த அடி மட்ட தொண்டனின் மனக்குமுரல் சத்தம் அரசியல்வாதிகளின் காதுகளில் கேட்க்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
English Summary
Record of the grassroots Will it be heard in the ears of politicians