முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளைகள் குறைப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
Reduction of lessons for first 10 class students
6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) முடிவுற்ற நிலையில், கோடை விடுமுறை மாணவ-மாணவிகளுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளை குறிப்பில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுகின்றன.
English Summary
Reduction of lessons for first 10 class students