கியூபா || புயலில் சிக்கி அகதிகள் படகு கவிழ்ந்ததில் 20 பேர் மாயம்.! தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


கியூபாவில் புயலில் சிக்கி அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கியூபாவில், நீண்டகால உணவு பற்றாக்குறை, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை மேற்கு கியூபாவை தாக்கிய சக்தி வாய்ந்த இயன் புயலால் மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கியூபாவில் இருந்து அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று இயன் சூறாவளியில் சிக்கி கவிழ்ந்தது. இதில், 23 அகதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளனர். 

இதையறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடலோர காவல் படை வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டாக் தீவு பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் 3 அகதிகள் மீட்கப்பட்ட நிலையில், உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகு கவிழ்ந்த விபத்தில் 20 மாயமாகினர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Refugee boat capsizes in Cuba


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->