இனி நோ டென்ஷன் - பதிவுத்துறை போட்ட உத்தரவு.!! பொதுமக்கள் நிம்மதி
registration dept has ordered people should not be harassed for minor mistakes
தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் ஆவணக்காரர்கள் மேற்கொள்ளும் சிறு பிழைக்காக அவர்களை அலகழிக்க கூடாது என பத்திரப்பதிவுத்துறை அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் "பத்திரப்பதிவுக்காக வரும் ஆவணதாரர்கள் சிறு பிழைக்காக அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரருக்கு தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் சரி செய்யத்தக்க சிறு பிழைக்காக ஆவணதாரர்களை அழைத்தல் கூடாது.
முடிந்தவரை அலுவலர்கள் ஆவணக்காரர்களின் சிரமத்தை குறைக்க வேண்டும். சிறு பிழைக்காக அலைக்கழிக்கப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திர பதிவுத்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
English Summary
registration dept has ordered people should not be harassed for minor mistakes