தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம்' திரு.பெ.சுந்தரம் பிள்ளை நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய தமிழறிஞர்' 'மனோன்மணீயம்' திரு.பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம்!.

 நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார்.

 இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891ஆம் ஆண்டு எழுதினார். அதில் இடம்பெற்ற நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ஆம் ஆண்டு அறிவித்தது.

 பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை தி டென் தமிழ் ஐடியல்ஸ் என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

 இவர் F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளார். பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Remembrance Day of Manonmaniam Thiru P Sundaram Pillai who wrote the Tamil Thai greeting song


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->