#மேட்டூர் || ஆற்றின் நடுவே சிக்கிய செல்ஃபி புல்லிங்கோஸ்... ஒரு மணிநேர போராட்டம்.!  - Seithipunal
Seithipunal


காவேரி ஆற்றின் நடுவே சிக்கித்தவித்த 3 இளைஞர்களை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பிய நிலையில், அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீரை பார்த்ததும்  தாரமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர். 

அப்போது தண்ணீர் வேகம் அதிகரித்த நிலையில் கரையை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர்.  அருகில் இருந்தவர்கள்  காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கி தவித்த இளைஞர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rescued 3 youths stuck in middle of Cauvery river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->