குறைகள் மட்டுமே "பூதாகரமாக பார்க்கப்படும்".. காவல்துறையினருக்கு சைலேந்திரபாபு கடிதம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட சைலேந்திரபாபு இன்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் அவர் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் "அன்பான காவல் அதிகாரிகளே, காவலர்களே, 30.06.2021 அன்று தமிழ்நாடு காவல்துறையின் தலைமை பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். இன்று பணி நிறைவு பெற்று உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். இரண்டு ஆண்டு கால சட்ட ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களை கண்டுபிடித்தோம். 

கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம், ஆனால், தவறாக ஒருவரையும் குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

தேவர் ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி போன்ற வழக்கமான சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் சமூகமாக கடத்திச் சென்றோம். ஜனாதிபதி, பிரதம மந்திரி வருகைக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தோம். தமிழ்நாட்டில் சாதி சண்டை இல்லை, மதக் கலவரம் இல்லை, ரயில் கொள்ளை, வங்கி கொள்ளை இல்லை, துப்பாக்கி கலாச்சாரம் இல்லை, பிற மாநில கொள்ளையர்கள் அட்டகாசம் இல்லை, கூலிப்படை நடமாட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்கினோம்.

இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுக்கள், உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் ஐந்து கோரிய முப்பதாயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும். 

காவலர்களுக்கு 5 நாள் பணி, ஆறாவது நாள் மிக நேர ஊதியம், ஏழாவது நாள் ஓய்வு என சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இருவர் வந்து படி ரூ.300 முதன்முறையாக அமலானது. காவலர் குடியிருப்பு அளவு 250 சதுர அடி என உயர்ந்தது, மகளிர் காவலர்களின் வருகை 7 மணி என்பது எட்டு மணி என மாறியது, எரிபொருள் படி உயர்த்தப்பட்டது. காவலர் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு 10% மீட்கப்பட்டது. 

1340 மறைந்த காவலர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நிலைய வரவேற்பு அதிகாரி வேலை 1600 வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது. 4000 சிறு தண்டனைகளை கலைத்து காவலர் நலன் காக்கப்பட்டது

12,173 காவலர்களை எனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளை கேட்டேன். 2400 காவலர்களை எனது பயணத்தின் போது சந்தித்து குறைகளை கேட்டேன். துரை நமக்கு செய்தது போல், நாமும் துறைக்கு கைமாறு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நான் பணி ஓய்வு பெறும் இந்த நாளில் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்.

பொதுமக்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமை பண்பு வளர்க்க உடல் நலன் மன நலன் காக்க வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும் காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வர வேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும் காவல்துறையின் செயல்பாட்டில் குடும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.

வதந்திகளை கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளை பார்த்து நான் வியப்படைகிறேன். இங்கொன்றும், அங்கொன்றும் நடந்தேறிய அசம்பாவிதங்களை நீங்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. பிரச்சனைகளை நீங்கள் வளர விடவில்லை. பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிவர்த்தி செய்து அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

நம்மைப் பற்றிய விமர்சனம் பல வரும், இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும், ஆனால் நிறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து அவற்றின் உண்மை தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம். உங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.!" என சைலேந்திரபாபு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retired Shailendrababu Letter to TamilNadu Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->