எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் கைது.!
retired village assistant arrestd for harassment in perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. கிராம உதவியாளராக வேலை பார்த்து இவர் நேற்று முன்தினம் அதே தெருவில் விளையாடி கொண்டிருந்த எட்டு வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதையடுத்து, அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி பெரியசாமியை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
retired village assistant arrestd for harassment in perambalur