பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. தமிழகத்தில் வேகமாக உயரும் அரிசி விலை.? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருளாக இருப்பது அரிசி. அந்த வகையில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அரிசி மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அரிசி தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே அரிசி விலை தொடர்ந்து உயர தொடங்கியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதித்து வரும் நிலையில் தற்போது அரிசி விலை உயர்வும் பொதுமக்களே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு பேசிய அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சக்திவேல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பொன்னி ரக அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும் ஆனால் சமீப காலமாக அந்த ரக அரிசிகளை அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தமிழகத்திற்கு வரும் அரிசியின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

அதன் காரணமாக தமிழகத்தில் மேலும் அரிசி விலை உயர்வு நீடிக்கும் என தெரிவித்துள்ளார். எனவே அரிசி விலை உயர்வில் அரசு நடவடிக்கை எடுத்து விலை உயர்வையும் அரிசி பற்றாக்குறையையும் சீராக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rice price increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->