ட்விட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு, வசமாக மாட்டிக்கொண்ட ஆர்.கே.சுரேஷ்- போலீசார் தீவிர விசாரணை!! - Seithipunal
Seithipunal


பாஜக நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டு, பின் உடனே 10 நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே.சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

மேலும் ஒரு நிதி நிறுவனத்தின் மோசடியிலும் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார். இதையடுத்து ஆர்.கே.சுரேஷ் எந்த இடத்தில் இருந்து டுவிட்டர் கணக்கை பயன்படுத்தினார் என்பதை கண்டறிய தொழில்நுட்ப ரீதியாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே அவர் விரைவில் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RK Suresh, who posted a photo on Twitter and got caught in the act Police are investigating


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->