பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பழனி முருகன் கோயிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருப்பது பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களின் பெரும்பாலானோர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதில் மலை ஏற முடியாதவர்களுக்கு எளிதாக மலைக் கோயிலுக்கு சென்று வர மின் இழுவை மற்றும் ரோப் கார் சேவைகளும் உள்ளன.

இதில் ரோப்கார் சேவை விரைவாகவும், சுற்றுலா அனுபவத்தையும் கொடுப்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் மூலம் செல்ல விரும்புகின்றனர். இதில் ரோப் கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். 

அதன்படி, நாளை முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rob car service stopped one month in pazhani murugan temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->