ஏற்காட்டில் அரங்கேறும் கொள்ளை லாபம்!...சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் பல மடங்கு விடுதிக்கட்டணம் வசூல்!
Robbery and profit taking place in yercaud due to the increase in tourist arrivals hotel fees are collected many times
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகவே இதமான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதலே அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தளங்களில் அலை மோதி வருகின்றனர். இதன் காரணமாக ஏரி சாலை, அண்ணா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் இதனை சரி செய்து வருகின்றனர்.
மேலும், 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் 2 ஆயிரம் முதல் 3000 ரூபாய் வரை விடுதி உரிமையாளர்கள் வசூலிப்பதாக குற்றச்சட்டு எழுந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சாலையோர வியாபாரிகள் மற்றும் அங்குள்ள வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Robbery and profit taking place in yercaud due to the increase in tourist arrivals hotel fees are collected many times