ரூ. 25 லட்சம் மதிப்பில் வாய்க்கால் அமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
Rs. 100 Construction of canal at a cost of 25 lakhs. Leader of the Opposition R. Siva started
வில்லியனூர் தொகுதி மாதா கோவில் வீதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் வாய்க்கால் அமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லியனூர் மாதா கோவில் வீதி மற்றும் மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் தெற்கு பிரிவு மூலம் ரூ. 25 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் எல் மற்றும் யு வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார மறுவாழ்வு மையம் எதிரில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் தெற்கு பிரிவு செயற்பொறியாளர் சந்திரமோகன், உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், வில்லியனூர் லூர்து மாதா ஆலய பங்குதந்தை ஆல்பர்ட், ஊர் முக்கியஸ்தர்கள் விஸ்வநாதன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல், சந்தானகிருஷ்ணன், கார்த்தி, சண்முகம், ஜேக்கப், பிரதாப், கணேஷ், டோமினிக், லூகாஸ், ரகு, பாஸ்கர், சங்கர், மகேஷ் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு,
வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அக்பர், கிளை நிர்வாகிகள் ராஜி, ஜெனா, மில்ட்டரி முருகன், வேதாச்சலம், கசேர், முருகேசன், திலகர், சிராஜ், தாமோதரன், ராதாகிருஷ்ணன், செல்வநாயகம், அன்பு நிதி, சுல்தான், பாலமுருகன், சார்புதின், கோவிந்தராஜ், முருகையன், பாலகுரு, ராஜேந்திரன், கமல் பாஷா, ரகு, அபிமன்னன், பாதின், வீரமுத்து, செல்வம், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Rs. 100 Construction of canal at a cost of 25 lakhs. Leader of the Opposition R. Siva started