குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! கேஸ் சிலிண்டருக்கு மேலும் ₹100 மானியம்!
Rs100 more subsidy on Ujjwala gas cylinder scheme
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கான மானியம் மேலும் 100 ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் 100 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மற்ற எரிவாயு சிலிட பெரும் நுகர்வோர்களைவிட உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளிகள் 500 ரூபாய் குறைவாக பெறுகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் விலை குறைத்த நிலையில் தற்போது மேலும் 300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.
ஏற்கனவே உயர்த்தப்பட்ட மானியத்தின் மூலம் மற்ற பயனாளர்கள் ஒரு சிலிண்டரை 900 ரூபாய்க்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்கள் 700 ரூபாய்க்கும் எரிவாயு சிலர்களை பெற்று வந்த நிலையில் தற்போது மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளர்களுக்கு 600 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் உருளை விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 100 ரூபாய் மானியத்தால் இந்தியா முழுவதும் சுமார் 9 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rs100 more subsidy on Ujjwala gas cylinder scheme