ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு...ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்!!
Rs2000 Crore Drug Trafficking Case Enforcement Department Summons Zafar Sadiq Brother
ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல் வைக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாஃபர் சாதிக்கின் வீட்டிற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல் வழக்கு சம்பந்தமாக ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட இயக்குனர் அமீர் உட்பட பாடல்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகை நேற்று ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் சுமார் ஆறு மணி நேரம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் வழக்கு மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rs2000 Crore Drug Trafficking Case Enforcement Department Summons Zafar Sadiq Brother