விவசாயிகளே ரூ.65 கோடி மானியம்!...இதோ உடனே பதிவு பண்ணிக்கோங்க! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சிறுதானிய இயக்கத்தை 2028-ம் ஆண்டு வரை தொடர்வதற்கு, நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுதும் சிறுதானிய உணவுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பாக தமிழகத்தில் விளையும் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, வரகு, தினை உள்ளிட்ட சிறுதானிய வகைகளுக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.

இதன் காரணமாக, சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க வழிவகை  செய்கிறது. இதனை கருத்தில் வைத்து, தமிழகத்தில் சிறுதானிய இயக்கத்தை வேளாண் துறை துவக்கியுள்ளது. இதில்,  கடந்தாண்டு ஒதுக்கிய நிதியில், 1.11 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், 2028ம் ஆண்டு வரை சிறுதானிய இயக்கத் திட்டத்தை தொடர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன் மூலம் ஏராளாமான விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் குழு உருவாக்க, 1,000 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், சிறுதானிய தொகுப்புகளை உருவாக்க, பழங்குடியின விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 840 ரூபாயம், இதர விவசாயிகளுக்கு 600 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே தேவையுள்ள விவசாயிகள், உழவன் மொபைல்போன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rupees 65 crore subsidy for farmers register now


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->