பூமியிலிருந்து உக்ரைனை அகற்ற நினைக்கிறது ரஷ்யா - அதிபர் ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.

மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தியுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள நகரங்களின் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும் உக்ரைன் தலைநகர் கிவ் மீது மட்டும் 75 ஏவுகணைகள் வீசப்பட்டதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா முழுமையாக எங்களை அழிக்க நினைக்கிறது என்றும், பூமியிலிருந்து உக்ரைனை அகற்ற நினைப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia wants to wipeout Ukraine from earth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->