நாங்க கேட்டதென்ன...நீங்க கொடுத்ததென்ன... கோபம் அல்ல இது வன்மம்!. எம்பி கொதிப்பு...
S Venkatesan mp slams central bjp government to allot fund to tamilnadu
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் நிவாரண நிதி விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை ஒன்றை வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்து வருவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழக அரசு கேட்டதோ ரூ,38,000 கோடி. கொடுத்ததோ ரூ.275 கோடி மட்டுமே என்றும் குறிப்பிட்டுளார். பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம். " என்று அவர் மேலும் அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
S Venkatesan mp slams central bjp government to allot fund to tamilnadu