மம்முட்டிக்காக சாமி தரிசனம் செய்த விவகாரம் - மோகன்லால் குற்றச்சாட்டுக்கு தேவஸ்தானம் விளக்கம்.!
sabarimalai devasthanam explain mohanlal pray issue
பிரபல நடிகர் மோகன் லால் சபரிமலையில் கடந்த 18-ந்தேதி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நடிகர் மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது. அதன் பின்னரே நடிகர் மம்முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
இதுகுறித்து மோகன்லால் தெரிவித்துள்ளதாவது:- "நடிகர் மம்முட்டிக்கு தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் பரப்பி விட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
வழிபாடு ரசீதை பெற்று சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
sabarimalai devasthanam explain mohanlal pray issue