திருப்பூர் மாவட்டம்! அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பாதுகாப்பாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் தவறி கிணற்றில் விழுந்த சிறுமியை பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராயம்பாளையம் புலிக்காடு தோட்ட பகுதியில் முருகேஷ் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் பவதாரிணி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தோட்டத்திற்கு கோழி பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். பவதாரணி கிணற்றில் விழுந்ததைை பார்த்த பவதாரணி தாத்தா மற்றும் மற்றொருவர் கிணற்றில் உடனடியாக குதித்து சிறுமியை காப்பாற்றி, கிணற்றுக்குள் இருந்த மோட்டார் அமைவிடத்தில் உட்கார வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இருந்த பவதாரணி உட்பட மூன்று பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Safe rescue of girl who fell into the well


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->