குஷியில் மக்கள்!நாளை கோடை விடுமுறை காரணமாக சேலம்-பெங்களூர் சிறப்பு ரெயில்...!
Salem Bangalore special train due to summer vacation tomorrow
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டதாவது,"கோடை விடுமுறையையொட்டி சேலம், நாமக்கல் கரூர் வழியாக பெங்களூரு-மதுரை இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் பங்காரு பேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலத்திற்கு வந்தடையும். கரூருக்கு அதிகாலை 1.43 மணிக்கும், மதுரைக்கு காலை 6.15 மணிக்கும் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் மே மாதம் 1-ந் தேதி காலை 9,10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடையும் இந்த இரவு 7. 30 மணிக்கு பெங்களூருக்கு சென்றடையும்.
2 அடுக்கு ஏ.சி. பெட்டி 2, 3 அடுக்கு ஏ.சி. பெட்டி 16, லக்கேஜ் பெட்டி உள்பட மொத்தம் 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Salem Bangalore special train due to summer vacation tomorrow