சேலம் புத்தர் கோவில் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை!
Salem Buddha Temple case HC stays single judge order
சேலம் பெரியேரி தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் ஒரு புத்த மத வழிபாட்டு தலம் என்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது.
சேலம் பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைத்துள்ளது தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில. இந்த கோவில் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது தனி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் அல்ல. அது புத்தர் கோவில். இதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை'' என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர், கமிஷனர் சார்பாக சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை வாதிட்டது.அதில் ''கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக தலைவெட்டி முனியப்பன் என்றே வழிபாடு நடைபெறுகிறது. 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டப்படி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அன்றைய தினத்தில் வழிபாட்டு தலமாக இருக்கும் எந்த ஒரு கோவிலையும் மாற்றம் செய்ய இயலாது. அதனால், ரிட் வழக்கில் தலைவெட்டி முனியப்பன் கோவிலை புத்தர் கோவில் என்று உத்தரவு பிறப்பிக்க இயலாது'' என்று இந்து சமய அறநிலையத்துறை வாதிடப்பட்டது.
அப்போது இதனை ஏற்று நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கினை ஏற்றுக்கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
English Summary
Salem Buddha Temple case HC stays single judge order