சேலம் அரசு பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 12-ம் வகுப்பு மாணவி.! இதில் பள்ளிக்கு எந்த சம்மந்தமும் இல்லை - மாவட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


சேலம் மேச்சேரியில் உள்ள தமிழக அரசின் மேல்நிலைப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கோகிலவாணி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

படுகாயம் அடைந்த மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக, மேச்சேரி காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி தற்கொலை முயற்சி சம்பவம் குறித்த விசாரணை செய்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவிக்கையில், "மாணவியின் தற்கொலைக்கும், பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாணவி தற்போது தனது பெரிய தந்தையுடன் வசித்து வருகிறார்.

மாணவியின் பெற்றோர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குடும்ப பிரச்சனை காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. மாணவியின் தற்கொலைக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்திக் கொண்டு வருகிறோம். மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem govt school girl attempt suicide case july


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->