பேருந்துக்காக காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்... ஓட்டுநர் கைது! சேலத்தில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


சேலம், தலைவாசலில் பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது அப்பகுதியில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. 

இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் அரசு பேருந்து நடத்தினர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நடத்துனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். 

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பயணிகள் சாலையோரம் நின்றிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem near cargo auto accident 2 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->