மணல் தட்டுப்பாடு இருக்குங்க! அதான் 25 மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்தோம் - அமைச்சர் பேட்டி!
Sand Quarry issue minister explain 2023
தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த 25 மணல் குவாரிகளில் மொத்தம் 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 11 மணல் குவாரிகள் திறக்கப்படுகின்றன. இவ்வளவு மணல் குவாரிகள் திறக்கப்படுவதும், அதில் எல்லையில்லாத அளவுக்கு மணல் அள்ளப்படுவதும் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் சரி செய்யவே முடியாத அளவுக்கு கேட்டை ஏற்படுத்தி விடும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 25 இடங்களில் புதிதாக மணல் குவாரி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து அமைச்சர் மெய்யானதன் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று மயிலாடுதுறையில் தமிழக அரசின் 2 ஆண்டுகால சாதனை மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் மெய்ய நாதன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "கட்டுமானப் பணிக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்ததால் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பை மேம்படுத்த மணல் அவசியமென்பதால் தேவைக்கேற்ப பொதுப்பணித்துறை மணல் குவாரியை திறக்கும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆற்று மணலுக்கு ஏராளமான மாற்றுகளும் வந்து விட்டன. தமிழ்நாடு அரசு நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Sand Quarry issue minister explain 2023