சங்கரன்கோவிலில் பரபரப்பு - ஒன்றிய துணை சேர்மனின் கணவர் வெட்டிக்கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முன்னாள் மேல நீலிதநல்லூர் ஒன்றிய துணை சேர்மனின் கணவர் வெளியப்பன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் சங்கரன்கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கவுன்சிலரின் கணவர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதாவது காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இருப்பினும், படுகொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sangaran kovil union sub chairman husband murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->