வேலூர் மாநகராட்சியை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்!!
Sanitation workers protest laying siege to Vellore Corporation
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 45 வார்டுகள் திமுக வெற்றி பெற்ற நிலையில் சுஜாதா என்பவர் வேலூர் மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வேலூர் மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு கடந்த மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தற்போது வரை கடந்த மாத ஊதியம் வழங்கப்படாததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வேலூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வடக்கு காவல் நிலையப் போலீசார் அவர்களை தடுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் சமாதானம் ஆகாத தூய்மை பணியாளர்கள் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sanitation workers protest laying siege to Vellore Corporation