ரம்மி நாயகன்! தான் விமர்சனம் செய்யப்பட்டபோதிலும், தடை சட்டத்தை வரவேற்ற நடிகர் சரத்குமார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டதால் 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரபல தமிழ் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், சரத்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நீங்கள் நடித்தது ஏன்? என்ற கேள்வியை செய்தியாளர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரை பார்த்து ''ரம்மி நாயகன் வாழ்க'' என்று கூட்டத்தில் ஒருவர் குரல் எழுப்ப, சரத்குமார் அதிர்ந்து போய் நின்ற சம்பவமும் அரங்கேறியது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைகள் இரண்டாவது முறையாக இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். 

தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை  வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், "ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் தடை என்றாலும், பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து, ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சிந்தித்து, நாடு முழுவதும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும்" என்று சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar Say About Online Gambling ban 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->