தைப்பூசத் திருவிழா : திருச்செந்தூரில் சர்ப்பக்காவடி எடுத்து வரத் தடை.! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்படும் விழா தைப்பூசம். இந்த விழா தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால், தமிழகத்தில் உள்ள முருகபக்தர்கள் அனைவரும் பாதயாத்திரையாக சென்று முருகனை தரிசனம் செய்வார்கள்.

இந்த தைப்பூச விழா முருகனின் அறுபடை வீடுகளில் மிக பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும். பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 

அதன் படி, இந்த வருடம் தைப்பூசம் நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிப்பதற்காக காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் படையெடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வரக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிகை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். 

அப்படி வரும் போது, சாலையின் இடதுபுறமாக வாகனங்கள் வருவதால் பக்தர்கள் மீது வாகனங்கள் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால், பக்தர்கள் சாலையின் வலதுபுறமாக நடந்து சென்று, எதிரே வரும் வாகனங்களை அறிந்து விபத்து நடக்காத படி, தங்களை காத்துக் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 

அதேபோல், பாதயாத்திரை பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி பாதுகாப்பாக தைப்பூச திருவிழாவை விபத்து இல்லாமல் வழிபட்டு செல்வதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் மற்றும் கொடிகளையோ கொண்டு வரக்கூடாது. குறிப்பாக சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் மொத்தம் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarppakavadi banned in thiruchenthoore for thaipoosam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->