#மதுரை: அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் பாகங்கள் - இஸ்ரோவில் 2வது முறையாக சாதனை..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் இஸ்ரோவுக்கு இரண்டாவது முறையாக செயற்கைக்கோள் பாகங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி ஆசாதி சாட் மென்பொருள் தயாரிப்பதற்காக இந்தியா முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. விண்வெளி அறிவியலில் பெண்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் செயற்கைக்கோள் மென்பொருள்கள் தயாரிக்க மாணவிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தயாரித்த ஆசாத் சாட்-1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

தற்பொழுது அதே நிறுவனத்துடன் இணைந்து 50 கிராம் எடையுள்ள பேலோடு-ஐ வெற்றிகரமாக தயாரித்து திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த பிலோடு-ஐ ஆசாதி சாட்-2 விண்கலத்துடன் பொருத்தப்பட்ட நிலையில் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Satellite parts 2nd time made by madurai govt school girls


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->