வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்? - சத்யபிரதா சாகு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பதிவான மக்களவை பொது தேர்தல் கான வாக்குப்பதிவு சதவீத அறிவிப்பில் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் அறிவிக்கப்பட்டது. 

இந்த முரண்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடைசி வரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. 

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டதால் தவறு நடைபெற்றுள்ளது. 

செயலியில் அனைத்து சாவடி அலுவலர்களுக்கு கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டுக் கொடுக்கும் தகவல் தாமதமாகும் என்பதால் செயலி மூலமாக உடனுக்குடன் அப்டேட் செய்தோம். 

பதிவான வாக்கு சதவீதம் மொத்த வாக்குகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிடும் தகவலை இறுதியானது. தேர்தல் நடைபெற உள்ள அண்டை மாநிலங்களின் எல்லையோர 12 மாவட்டங்களில் பறக்கும் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சாகு.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathya Pradha Sahoo explain polling percentage irregularities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->