போலி நகைகளை அடகு வைத்த வாலிபர்! பிளான் போட்டு தூக்கிய வங்கி ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


ஈரோடு, சத்தியமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு இருப்பவர்களுக்கு நகை கடன் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் (வயது 40) என்பவர் நேற்று வங்கிக்குச் சென்று புதிய வங்கி கணக்கு தொடங்கி தங்க நகை அடகு வைத்து நகை கடன் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

பின்னர் அவர் வைத்திருந்த நகைகளை மதிப்பீட்டாளரிடம் கொடுத்து விட்டு, வங்கி கணக்கு தொடங்குவதற்காக கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து வங்கி ஊழியர்கள் சேகர் மீது சந்தேகமடைந்தனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவிற்கு வந்த எச்சரிக்கை செய்தியில், கரூர் கூட்டுறவு வங்கி கிளையில் போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற வந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதாகவும் வேறு எங்கேயாவது இந்த நபர் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற முயற்சி செய்தால் கவனமாக இருக்க வேண்டும் எனவும் நபரின் புகைப்படத்துடன் வந்த குறுஞ்செய்தி நினைவிற்கு வந்துள்ளது. 

இதனால் உடனடியாக மூர்த்தியை பிடிப்பதற்கு வங்கி ஊழியர்கள் வங்கியின் கதவை இழுத்து மூடி சேகர் தப்பிக்க முயலாதவாறு வங்கி ஊழியர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். 

உடனடியாக இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரை கைது செய்து அவனிடம் இருந்த 42 சவரன் எடையுள்ள போலி நகைகள், போலி ஆதார் கார்டு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட சேகரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathyamangalam fake jewel get loan person arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->