விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் நினைவு தினம்..!!
satyamurti memorial day 2022
சத்தியமூர்த்தி :
விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார். இவர் நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். மேலும், சமூக சீர்திருத்த சிந்தனைமிக்கவர்.
1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில், தேசியக்கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் எப்போதோ ஓடியிருப்பார்கள் என்றார் காந்தியடிகள்.
சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துக்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.
இவரது ஒப்பற்ற பணியை நினைவுக்கூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி மறைந்தார்.
English Summary
satyamurti memorial day 2022