‘கம்பெனி ஆர்டிஸ்ட்’ - ஓட்டுநர் ஷர்மிளாவை கலாய்த்த சவுக்கு சங்கர்.! - Seithipunal
Seithipunal


‘கம்பெனி ஆர்டிஸ்ட்’ - ஓட்டுநர் ஷர்மிளாவை கலாய்த்த சவுக்கு சங்கர்.!

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டி வந்தார். கோவையின் முதல் பெண் ஓட்டுநரான இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இவருக்கு வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் இயக்கும் பேருந்தில் பயணமும் செய்துள்ளனர். அந்த வகையில், இன்றைய தினம் திமுக எம்பி கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்ட போது பயணசீட்டு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷர்மிளாவுக்கும்-பேருந்து பெண் நடத்துனருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஓட்டுநர் ஷர்மிளா செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”கனிமொழி மேடம் என்னை பார்த்துவிட்டு போவதற்காக பேருந்தில் வந்திருந்தார். அப்போது எங்கள் வண்டியில் நியமிக்கப்பட்ட பெண் நடத்துநர் கனிமொழியிடம் மனம்புண்படும்படி நடந்துள்ளார்.

இது குறித்து ஓனரிடம் சொல்லும் போது ’நீ பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருத்தரையும் கூட்டிட்டு வர’ என்றார். கனிமொழி மேடம் 23ஆம் தேதி வருவதை முன்கூட்டியே பேருந்து மேனேஜரிடம் சொல்லி இருந்தார். ஆனால் அவர் அதனை சொல்லவே இல்லை என்று மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக என் அப்பா பேசும்போது வேண்டுமென்றால் வேலையைவிட்டு நின்றுகொள்ளுங்கள் என ஓனர் கூறிவிட்டார்” என்று தெரிவித்தார். இந்த நிலையில்,  ஓட்டுநர் ஷர்மிளா இந்துத்துவ அமைப்புகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு பேசுபொருளாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஷர்மிளாவை "சங்கி" என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் ஓட்டுநர் ஷர்மிளாவை ‘கம்பெனி ஆர்டிஸ்ட்’ என்று விமர்சித்துள்ளார்.

இதேபோல், திமுக ஆதரவு நெட்டிசன்கள் ஷர்மிளா குறித்த இந்த பரபரப்பு செய்திகளுக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாகவும், பீகாரில் ஒன்று கூடியுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்த செய்திகளை திசைத்திருப்புவதற்காகவே இத்தகைய சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

savukku sankar called company artist to driver sharmila


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->