சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு! - Seithipunal
Seithipunal


கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது

தேனியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்யும்போது, அவரின் உதவியாளர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

மேலும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக, அவமரியாதையாக பேசியதாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளில் தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பெண் காவலர்கள் குறித்து பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனை எதிர்த்து சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில். சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பி, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கில் குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Again Gundas TN Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->