சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Savukku Shankar Bail Case kovai Court order
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மேலும், தேனியில் அவர் தனக்கிருந்த இடத்தில கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் கைது செய்பட்டு உள்ளார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.
இதில், கடந்த 4-ஆம் தேதி பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக, கோவை சைபர் க்ரைம் காவல்துறையினரால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கபட்டு உள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று, விசாரணையை வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
English Summary
Savukku Shankar Bail Case kovai Court order